ஜனவரியிலும் மழை நீட்டிக்குமா? வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

Siva

வியாழன், 26 டிசம்பர் 2024 (14:46 IST)
டிசம்பர் மாதத்தில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், ஜனவரி ஒன்றாம் தேதியும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு இன்றும் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வாக வலு குறைந்து காணப்படுவதாகவும், இதனால் தமிழகத்தில் சில இடங்களில் மழை உண்டாக காரணமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், டிசம்பர் 28ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்யும் எனவும், ஜனவரி 1ஆம் தேதிக்கு பிறகு மழை நீடிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் உள்ளது.

சென்னையை பொருத்தவரை, அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வட தமிழக கடலோர பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால், அந்த பகுதிக்குச் செல்ல மீனவர்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்