திமுக தலைமையிலானக் கூட்டணியில் காங்கிரஸும் இடம்பெறும் என்பது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கு ராகுல் காந்தி வந்தபோதே முடிவாயிற்று. அதன் பின் திமுக கூட்டணியில் வேறு சிலக் கட்சிகளும் இணைய ஆரம்பித்தன. இடையில் பாமக வை இழுக்க திமுக முயன்ற போது கூட்டணிக்குள்ளும் ஊடகங்களிடம் ‘ பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க இயலாது’ என விசிக தலைவர் திருமாவளவன் வெளிப்படையாகவே அறிவித்தார்.
2 தொகுதிகள் ஒதுக்கினாலும் விசிக உதயசூரியன் சின்னத்திலேயேப் போட்டியிட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் திமுக வேட்பாளர்களாகவே கருதப்படுவார்கள். வெற்றி பெற்றால் 5 வருடங்களுக்கும் திமுக மற்றும் காங்கிரஸ் மீதான் ஆதவை திரும்பப் பெற இயலாது. அப்படிக் கட்சி மாறினால் அவர்கள் பதவி இழக்க நேரிடும். அதனால் இந்த நிபந்தனைக்கு மட்டும் எந்த பதிலும் சொல்லாமல் இருந்து வருகிறதாம் விசிக.