எங்க சுவருடா அது? பாஜக – திமுக மோதல்! திமுக நிர்வாகி கைது!

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (08:29 IST)
சென்னையில் சுவர் ஒன்றில் தேர்தல் விளம்பரம் செய்வதில் திமுக – பாஜகவினரிடையே மோதல் எழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையில் உள்ள நங்கநல்லூர் பகுதியில் சுவர் ஒன்றில் கட்சி விளம்பரம் செய்ய திமுகவினர் குறியீடு போட்டு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

அதை மீறி பாஜகவினர் அந்த பகுதியில் சுவர் விளம்பரம் செய்வதாக அறிந்த திமுக நிர்வாகி ஒருவர் அங்கு விரைந்துள்ளார். இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் எழுந்ததில் பைக்கில் வந்த திமுக நிர்வாகி பைக்கை கொண்டு பாஜகவினரை மோதியதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். சண்டை வலுக்கும் முன்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து திமுக நிர்வாகியை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் நங்கநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்