காங்கிரஸை கழட்டிவிட ஒற்றை இலக்கத்தில் தொகுதி தருவதாக தகவல்: திமுகவின் பலே திட்டம்

திங்கள், 21 செப்டம்பர் 2020 (17:39 IST)
தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி இந்த முறை இருக்காது என்றே கணிக்கப்படுகிறது 
 
குறிப்பாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 60 தொகுதிகள் வரை எதிர்பார்ப்பதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி 20 தொகுதிகள் எதிர்பார்ப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
மேலும் திமுகவுக்கு ஆலோசனை கூறி வரும் பிரசாந்த் கிஷோர் இம்முறை எந்த கட்சியுடனும் கூட்டணி வேண்டாம் என்றும் 234 தொகுதிகளிலும் தனியாக நிற்கவும் ஆலோசனை கூறியுள்ளதாக தெரிகிறது 
 
எனவே கூட்டணி கட்சிகள் தானாகவே கழண்டு கொள்வதற்கு திமுக பலே ஐடியா ஒன்றை வைத்துள்ளது அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு ஒற்றை இலக்கத்தில் தான் சீட்டு தருவோம் என்று கூறுவதாகவும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒன்று அல்லது இரண்டு தொகுதிகள் மட்டும் தான் என்றும் அதுவும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று நிர்பந்தம் செய்தால் தானாகவே அந்த கட்சிகள் கழண்டு விடும் என்று ஆலோசனை செய்து இருப்பதாக தெரிகிறது 
 
எனவே இம்முறை திமுக கிட்டத்தட்ட கூட்டணி கட்சிகளை கழட்டிவிட்டு அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்