''6 மாதம் சிறைத்தண்டை வழங்க வேண்டும் ! ''சூர்யாவை விமர்சித்த நடிகர் ராதாரவி

திங்கள், 21 செப்டம்பர் 2020 (17:08 IST)
சமீபத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக ஒரே நாளில் 3 மாணவர்கள்  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து இது பெரும் பொருளானது என்றாலும் நீட் தேர்வு மத்திய அரச்யு வழிகாட்டலில் சிறப்பாக நடந்து முடிந்தது.

இந்த நீட் தேர்வுக்கு எதிராக  நடிகர் சூர்யா அறிக்கை  வெளியிட்டார். இதுதொடர்பாக  பாஜக மற்றும் அதன் ஆதரவு கட்சியினர் கடும் விமர்சனம் தெரிவித்தனர்.

அவரை அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு தரப்படும் என அறிவிப்பை வெளியிட்டனர். இந்நிலையில், நடிகர் ராதாரவி சூர்யா மீது விமர்சனம் தெரிவித்துள்ளர். அவர் கூறியுள்ளதாவது :

நீட் தேர்வுகள் மட்டுமின்றி பல விவகாரங்களில் சூர்யா  சாரம்சம் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்.  இதுபோன்று விபரங்கள் தெரியாமல் பேசுபவர்களுக்கு 6 மாத காலம் சிறைத்தண்டனை  வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்