திமுகவில் இந்த கட்சிக்கு 2 தொகுதிகள்: வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

Webdunia
செவ்வாய், 5 மார்ச் 2019 (12:12 IST)
திமுகவில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
திமுக காங்கிரசுடன் கூட்டணியை உறுதி செய்து, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 9 தொகுதி என மொத்தம் 10 தொகுதிகளை வழங்கியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு தலா 1 தொகுதிகளை வழங்கியுள்ளது. 
 
நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது.
 
மார்க்சிஸ்ட் கட்சியுடன் இரு கட்ட பேச்சுவார்த்தை ஏற்கனவே முடிவு பெற்றிருந்த நிலையில் இன்று நடந்த மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்