பாகிஸ்தானின் திடீர் தாக்குதலில் ராணுவ வீரர் பலி! - ராஜஸ்தான் முதல்வர் இரங்கல்!

Prasanth Karthick

ஞாயிறு, 11 மே 2025 (10:00 IST)

நேற்று போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு பிறகும் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துள்ளார்.

 

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்து வந்த நிலையில் அமெரிக்காவின் தலையீட்டின் பேரில் நேற்று இரு நாடுகளும் போர்நிறுத்தத்தை அறிவித்தன. ஆனால் போர்நிறுத்தம் அறிவித்து சில மணி நேரங்களிலேயே பாகிஸ்தான் இந்தியா மீது ட்ரோன் தாக்குதலை நடத்தியது.

 

ஜம்மு - காஷ்மீரில் உதம்பூரில் உள்ள இந்தியா விமானப்படை தளத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இந்திய ராணுவம் அதை முறியடித்தது. ஆனால் ட்ரோன் தாக்குதலின்போது ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்த சுரேந்திர சிங் மோகா என்ற ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துள்ளார்.

 

ராஜஸ்தானின் ஜுன்ஜுனுவை சேர்ந்த சுரேந்திர சிங் மோகா, உதம்பூர் விமானப்படை தளத்தில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வந்தார். அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது வீர மரணத்திற்கு ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்