போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? இன்று விளக்கம் அளிக்கிறது இந்திய ராணுவம்..!

Siva

ஞாயிறு, 11 மே 2025 (09:56 IST)
இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக நடந்த மோதல் மிக அதிகமாக இருந்தது. இரண்டு நாடுகளும் நேரடி தாக்குதலுக்கு தயாராக இருந்த நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு இருந்து போர் நிறுத்தம் செய்ய ஒப்பந்தமாகின. இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
 
இருப்பினும், அதன் பிறகு ஜம்மு மற்றும் காஷ்மீரில் வெடிகுண்டு சத்தங்கள் கேட்டது. . "இது தான் போர் நிறுத்தமா?" என மாநில முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பினார். பல இடங்களில் ட்ரோன்கள் பறந்தன, அதனை நமது பாதுகாப்புப் படையினர் தாக்கி வீழ்த்தினர்.
 
பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தியால், பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி நமது வீரர்கள் எதிர்வினை நடவடிக்கைகள் மேற்கொண்டனர். நள்ளிரவுக்கு பிறகு நிலைமை மெதுவாக சீரடைந்தது. காஷ்மீரில் பூஞ்ச், ஜம்மு, ரஜோரி மற்றும் அக்னூரில் இயல்பு நிலை திரும்பத் தொடங்கியது.
 
தற்போது வரை புதிதாக ட்ரோன் தாக்குதல் அல்லது ஏவுகணை தாக்குதல் இல்லை. இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு ராணுவ அதிகாரிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின் நடந்தது என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்கவுள்ளனர். அப்போது முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்