சண்டை நிறுத்தம் ஏற்பட்டாலும் பகல்ஹாம் பயங்கரவாதிகளை சும்மா விடக்கூடாது: ஒவைசி

Siva

ஞாயிறு, 11 மே 2025 (09:44 IST)
இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டாலும், பகல்ஹாம்  தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை சும்மா விடக்கூடாது என ஓவைசி ஆவேசமாக பேசியுள்ளார்.
 
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பகல்ஹாம்  என்ற பகுதியில் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்கியதில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்தியா "ஆபரேஷன் சிந்தூர்" என்ற நடவடிக்கையை எடுத்தது என்றும், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் போர் ஏற்படும் சூழல் ஏற்பட்ட நிலையில், அமெரிக்கா உள்பட சில நாடுகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நேற்று மாலை நிறுத்தப்பட்டது. இருப்பினும், ஒப்பந்தத்திற்கு பிறகும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
 
இந்த நிலையில், பாகிஸ்தான் தனது மண்ணை இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்திற்கு பயன்படுத்துவதை நிறுத்தும் வரை நிரந்தர அமைதி கிடையாது என்றும், சண்டை நிறுத்தம் இருக்கிறதா இல்லையோ, பகல்ஹாம் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை நாம் சும்மா விடக்கூடாது என்று ஒவைசி கருத்து தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்