தேமுதிகவிற்கு திமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக சொல்லப்படும் நிலையில் அதிமுக மற்றும் தேமுதிக இடையிலானக் கூட்டணிக்கே சாத்தியம் அதிகம் எனக் கூறப்படுகிறது. பாமகவிற்கு கொடுத்தது போலவே, 7 சீட்டாவது வேண்டும் என்று தேமுதிக விடாப்பிடியாக உள்ளது. அவர்கள் கேட்கும் 7 சீட்டை கொடுத்துவிட்டால் மொத்தமாக 19 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கே கொடுக்கவேண்டிய நிலை அதிமுகவிற்கு ஏற்படும்(பாஜக - 5, பாமக-7) தேமுதிக கேட்கும் 7 என மொத்தம் 19 தொகுதிகள். தேமுதிகவின் சூட்டை குறைக்க 5 சீட் மற்றும் 150 கோடி ரூபாய் தேர்தல் நிதி கொடுக்க அதிமுக டீல் பேசி வருகிறதாம்.