9 மணிக்கு கரெக்டா ஆஜர் ஆகிருங்க... உத்தரவு போட்ட விஜய்காந்த்!!

Webdunia
திங்கள், 10 பிப்ரவரி 2020 (16:15 IST)
வரும் 12 ஆம் தேதி கழக அலுவலகத்திற்கு 9 மணிக்கு அனைவரும் வர வேண்டும் விஜய்காந்த் அழைப்பு விடுத்துள்ளார். 
 
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த், கடந்த 2005ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை தொடங்கினார். தற்போது உடல்நல குறைவால் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியுள்ளார். 
 
இந்நிலையில் தேமுதிக நிர்வாகிகளுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வரும் 12 ஆம் தேதி கழகத்தின் 20 ஆம் ஆண்டு கொடி நாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அன்றைய தினம் காலை 9 மணியளவில் கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் கொடியேற்றப்படும்.
 
அதுவும் 118 அடி உயர கம்பத்தில் கொடியேற்றி சிறப்பிக்கப்பட உள்ளது. எனவே, இந்த விழாவில் மாவட்ட, வட்ட மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்படுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்