காசி விஸ்வநாதர் கோவிலில் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி.. மகா கும்பமேளா விழாவில் பங்கேற்பு..!

Siva

ஞாயிறு, 12 ஜனவரி 2025 (12:07 IST)
இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவில் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரன் என்பவர் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலத்தில்   கும்பமேளா விழா மிகவும் சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இந்த திருவிழா நடைபெறுவது.  இந்த திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் குவிந்து கும்பமேளாவை கொண்டாடி வருகின்றனர்.

கும்பமேளா நடைபெறும் நாட்களில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை மிகவும் புனிதமாக இந்து மக்கள் கருதுகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிகளில் சுமார் 45 கோடி பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களுடைய மனைவி லாரன் தற்போது கும்பமேளாவுக்கு இந்தியா வந்துள்ளார். இவர் ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர் என்பதும், ஏற்கனவே தனது கணவருடன் இந்தியா வந்துள்ள நிலையில் தற்போது கும்பமேளாவுக்கு வந்து காசு விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இன்னும் சில நாட்கள் அவர் இந்தியாவில் தங்கி இருப்பார் என்றும், மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.



Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்