சிதம்பரம் கோவில் நிலங்களை விற்ற தீட்சிதர்கள்? - ஆதாரங்களுடன் இந்து சமய அறநிலையத்துறை!

Prasanth Karthick
வெள்ளி, 25 அக்டோபர் 2024 (11:31 IST)

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்றதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

 

 

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களுக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் இடையே அடிக்கடி முரண்பாடுகள், மோதல்கள் எழுந்து வருகிறது. முன்னதாக கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதில் வாக்குவாதம் எழுந்தது. இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்றதாக இந்து சமய அறநிலையத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.

 

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் தீட்சிதர்கள் தரப்பில் “கோவில் நிலங்கள் தீட்சிதர்கள் வசம் இல்லை. அறநிலையத்துறை கூறும் குற்றச்சாட்டு துரதிர்ஷ்டவசமானது” என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
 

ALSO READ: இந்திய சுற்றுலா பயணிகள் இல்லாததால் பொருளாதார வீழ்ச்சி.. சம்பளத்தை குறைக்கும் மாலத்தீவு..!
 

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் “கோவிலுக்கு சொந்தமான நிலங்களை 1974, 1985 மற்றும் 1988ம் ஆண்டுகளில் தீட்சிதர்கள் விற்றதற்கு ஆதாரங்கள் உள்ளது” என கூறப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பதில் அளிக்க தீட்சிதர்களுக்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் நவம்பர் 14ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்