கடந்த 2018ஆம் ஆண்டு வடகலை, தென்கலை ஆகிய இரு பிரிவினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் நீதிமன்றம் செல்லும் அளவுக்கு அதிகரித்தது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலைப் பொறுத்தவரை, தென்கலை பிரிவினர் தான் பிரபந்தம் பாடுவதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில், வடகலை பிரிவினரும் தங்களுக்கும் பிரபந்தம் பாட உரிமை வேண்டும் என்று கோரியதால் பிரச்சனை வெடித்தது.
இந்த நிலையில் தான் வடகலை, தென்கலை பிரிவினர் இடையிலான பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்து சமய அறநிலையத்துறை குடவோலை முறையில் சீட்டுக் குலுக்கிப் போட்டு பிரபந்தம் பாடுவதை உறுதி செய்துள்ளது. இதனால் இந்த பிரச்சனைக்கு தற்போது சுமூக தீர்வு ஏற்பட்டுள்ளது.