சிதம்பரம் கோவிலில் கிரிக்கெட் சர்ச்சை! விசிகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

Prasanth Karthick

வியாழன், 10 அக்டோபர் 2024 (12:21 IST)

சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடிய விவகாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

 

 

சமீபத்தில் சிதம்பரம் நாராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கோவில் வளாகத்திற்குள்ளேயே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், அதை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்தார் இதனால் அவரது செல்போனை தீட்சிதர்கள் பறித்துக் கொண்டதால் பரபரப்பு எழுந்தது.

 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தீட்சிதர்கள் செல்பொனை பறித்துக் கொண்டு தன்னை தாக்கியதாக விசிக பிரமுகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 

ALSO READ: அரபிக்கடலில் உருவானது புயல் சின்னம் ..வடமேற்கு திசை நோக்கி நகர வாய்ப்பு..!
 

இந்த விவகாரம் குறித்து திண்டிவனத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் “சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் கோவிலுக்குள் கிரிக்கெட் விளையாடியதும், அதை வீடியோ எடுத்த விசிகவினரை தாக்கியதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர்களுக்கு வேண்டுமானால் தீட்சிதர்கள் மட்டும் விளையாடக் கூடிய கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைத்து தரலாம்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்