குவைத் சிட்டியில் நடந்த 'ஹாலா மோடி' என்ற குவைத் வாழ் இந்தியர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். பின்னர், குவைத் மன்னர் ஷேக் மெஷால் அல் அஹமது அல் ஜாபர் அல் ஷாபாவை என்பவரை சந்தித்து, இந்தியா மற்றும் குவைத் தரப்பு உறவுகள் குறித்தும் ஆலோசனை செய்தார்.
இந்த நிலையில், குவைத் நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்' என்ற விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. நட்பின் அடிப்படையில் நாட்டின் தலைவர்களுக்கும் அரச குடும்ப உறுப்பினர்களுக்கும் மட்டுமே இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, இந்த விருது முன்னாள் அமெரிக்க அதிபர்கள் பில் கிண்டன், ஜார்ஜ் புஷ், மற்றும் பிரிட்டிஷ் மன்னர் சார்லஸுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.