ஃபெஞ்சால் புயல் நிவாரணம்.. யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

Mahendran
செவ்வாய், 3 டிசம்பர் 2024 (16:01 IST)
ஃபெஞ்சால் புயல் நிவாரணம்  யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும் என்பது குறித்த தகவல்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதுகுறித்த விவரங்கள் பின்வருமாறு:

ஃபெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு நிவாரணம் புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது.

அதேபோல் சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.10,000, முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் முன்னுரிமை
நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 17,000,  பல்லாண்டு பயிர்கள், மரங்கள் ஹெக்டேருக்கு ரூ.22,500, மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.8,500 வழங்கப்படும்.

எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.37,500,  வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.4,000; கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ.100 வழங்கப்படும்.

மேலும் விழுப்புரம் கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 நிவாரணம் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்’ என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்