மின்கட்டணங்கள் உயர்கிறதா ? – மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு !

Webdunia
வியாழன், 26 செப்டம்பர் 2019 (11:12 IST)
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2018 - 2019 ஆண்டில் மின்சாரக் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நஷ்டத்தை ஈடுகட்ட புதிய மின் இணைப்பு கட்டணம், பதிவு கட்டணம், மீட்டர் காப்பீட்டு கட்டணம், வளர்ச்சி கட்டணம் ஆகியவற்றை உயர்த்த உள்ளதாக அறிவித்தது.

அதன்படி, மின்சார இணைப்புக்கான பதிவு கட்டணம் ரூ. 50-ல் இருந்து ரூ. 400 ஆகவும், ஒரு முனை இணைப்புக்கான வைப்புத்தொகை 200 ரூபாயில் இருந்து, 1000 ரூபாயாகவும், மும்முனை இணைப்புக்கான வைப்புத் தொகை ரூ. 600-ல் இருந்து ரூ. 1,800 ஆகவும் உயர்த்தப்பட உள்ளதாக அறிவித்தது. மேலும் ஒருமுனை இணைப்புக்கான ஆய்வுக்கு 580 ரூபாய் என்றும், மும்முனை இணைப்பு கொடுக்க 1,520 ரூபாய் என்றும் உயரவுள்ளது

இதனால் ஏழை எளிய மக்கள் அதிகமாகப் நிதிச்சுமைக்குள்ளாக உள்ளனர் என்றும் மின் விநியோகக் கட்டமைப்பில் ஏற்படுகின்ற நிதி இழப்பீடுகளை மாநில அரசே எதிர்கொள்ள வேண்டும் என்ற உதய் திட்ட ஒப்பந்தத்தை மீறவுள்ளதாகவும் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்