திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா கட்டுபாடுகள் விதிப்பு!

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (17:37 IST)
தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

 
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,063 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,64,131 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனா பாதிப்பு தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என திருவள்ளூர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 
 
வணிக வளாகங்கள், உணவகங்களில் கிருமிநாசினி கட்டாயம் பயன்படுத்த வேண்டும்  மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 
 
திருமண மண்டபங்களில் 100 நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். வணிக வளாகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இறப்பு மற்றும் இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்