10 ஆம் வகுப்புத் தேர்வில் மகன் குறைத்த மதிப்பெண்...தந்தை தற்கொலை !

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (17:15 IST)
திருப்பூர் மாவட்டம் அருகே 10 ஆம் வகுப்பு தேர்வில் மகன் குறைந்த  மதிப்பென் பெற்றதால், தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டிற்காக பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவு கடந்த 20 ஆஜ் தேதி வெளியானது. இதில், திருப்பூர் மாவட்ட மடத்துக்குளம் அருகே உள்ள பெரிய வட்டாரம் கோவில்கோவில் வீதியில் வசித்து வருபவர் சந்திரமோகன்(46). இவரதுமகன் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நிலையில், அதில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் அவர் கவலையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று, தன் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சந்திரமோகனின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கான அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்