அதிமுகவில் இருந்து திமுக விற்கு வந்த ஒன்றிய பெருந்தலைவரால் தொடரும் சர்ச்சை ?

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (23:46 IST)
அதிமுகவில் இருந்து திமுக விற்கு வந்த ஒன்றிய பெருந்தலைவரால் தொடரும் சர்ச்சை ? விவசாயிகளுக்கு லோன் வேண்டுமா ஒன்றிய பெருந்தலைவரும், கூட்டுறவு சங்கத் தலைவருமான செல்வராஜ்  வீட்டிற்குச் சென்று உத்திரவு பெற்று விட்டு வா ? என்று தாழ்த்தப்பட்ட விவசாயிகளை மிரட்டும் கூட்டுறவு சங்க செயலாளர் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா ?
 
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலவிடுதி தொடக்க வேளான் கூட்டுறவு வங்கியில் TYSPL9 செயலாளராக பணிபுரிபவர் மாரிமுத்து, இந்த சங்கத்தின் தலைவராக இருப்பவர் கடவூர் செல்வராஜ், இவர் கடவூர் ஒன்றியப்பெருந்தலைவரும் ஆவார். இந்நிலையில். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிமுக கட்சியிலிருந்து திமுக விற்கு, அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில்  இணைந்தார். இணைந்த நாள் முதல் இன்றுவரை அதே பகுதியிலும் சரி, அந்த ஒன்றியத்திலும் வாரந்தோறும் ஏதேனும் ஒரு பஞ்சாயத்து இருந்து வந்து கொண்டிருக்கின்றது. அண்மையில், கூட்டுறவு சங்கதலைவரும், ஒன்றியப்பெருந்தலைவருமான கடவூர் செல்வராஜ் மற்றும் கூட்டுறவு சங்க செயலாளருமான மாரிமுத்து ஆகிய இருவர் அண்மையில்  கூட்டுறவு வங்கியில் முறைகேடாக கடன் வழங்கப்பட்டதாக விவசாயிகள் கரூர் மாவட்ட ஆட்சியரிடமே குற்றஞ்சாட்டிய நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த அரசு கலைக்கல்லூரியினை தரகம்பட்டி பகுதியிலிருந்து மாற்றி மைலம்பட்டிக்கு கொண்டு செல்ல வேண்டுமென்று அந்த ஊர் (தரகம்பட்டி) பொதுமக்களே கூடாது என்று கூறி, கடையடைப்பு போராட்ட்த்தினையும் ஆர்பாட்டத்தினையும் நடத்தினர். இதற்கு முன்னர் பல்வேறு குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க தான் அதிமுக விலிருந்து திமுக விற்கு சென்றார் என்பது தெரியவர திமுக கட்சியிலேயே பெரும் பூகம்பம் வெடித்தது.பாலவிடுதி அருகே சாந்துவார்பட்டி பகுதியினை சேர்ந்த மூர்த்தி என்பவர் விவசாய கடன் பெறுவதற்கு கூட்டுறவு சங்கத்திற்கு செல்லும் போது, கூட்டுறவு சங்க செயலாளர் மாரிமுத்து குறுக்கிட்டு, எங்கே செல்கின்றாய் என்றும், ஒருமையாக அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தினை சார்ந்தவர் என்பதினால் வாடா, போடா என்ற வார்த்தைகளை கையாண்டதோடு, தகாத முறையில் கெட்ட வார்த்தை கொண்டும் திட்டியுள்ளார். இதனையடுத்து இந்த வீடியோ ஆனது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதுமட்டுமில்லாமல். கூட்டுறவு வங்கி கடன் வேண்டுமென்றால், அண்ணன் வீட்டிற்கு (கடவூர் செல்வராஜ்) சென்று உத்திரவு பெற்று வா,. அதற்குள் நீ என்ன நாட்டாமையா ? என்று கடுமையாக அந்த விவசாயியை விமர்சித்துள்ளார். ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் விவசாயி என்றும் பாராமல் பட்டப்பகலில் ஏராளமானோர் பார்க்கும் வகையில் மற்றவர்கள் மத்தியில் மிகவும் கேவலமாக கூறிய செயல் இப்பகுதியில் பெரும் பரபரப்பினையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆங்காங்கே குடி போதையில் தகராறு உள்ளிட்ட ஏராளமான சம்பவங்களை நேரில் பார்த்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் மாவட்டத்தின் மீதும், பாலவிடுதி கூட்டுறவு சங்கத்தின் மீதும் நடவடிக்கை எடுப்பாரா ? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆகவே நல்லாட்சி நாயகன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் கெடும் அளவிற்கு கடுமையான செயல்களை புரிந்து வரும் அதிமுக விலிருந்து திமுக விற்கு மாறியவர்களால் நிகழ்வதனை என்ன என்று கூறுவது என்கின்றனர் நடுநிலையாளர்கள்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்