பாகிஸ்தான் அமைச்சர் மீது துப்பாக்கி சூடு

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (23:01 IST)
பாகிஸ்தான் அமைச்சர் ஷிப்லி பிராஸ் என்பவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்சசியை ஏற்படுத்தியுள்ளது.
 
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலமை யிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அமைச்சரவையில்  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைசராக உள்ள ஷிப்லி பராஸ் . இவர் நேற்று கைபர் பங்துல்லா மாகாணத்தில் காரில் சென்று கொண்டிருந்தார்.அப்பொது ஒரு மர்ம கும்பல் ஒன்று அவரது காரை இடைமறித்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. இதில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரது கார் சிறிது சேதம் அடைந்தது. அவர் மீது தாக்குதல் நடத்திவர்கள் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்