சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கையும் சேர்த்து சாலை அமைத்த ஒப்பந்ததாரர்: வைரல் புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (18:43 IST)
சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கையும் சேர்த்து சாலை அமைத்த ஒப்பந்ததாரர்: வைரல் புகைப்படம்!
சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கையும் சேர்த்து சாலை அமைத்த ஒப்பந்ததாரர் குறித்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது
 
வேலூர் மாநகராட்சியில் இரவோடு இரவாக கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது. இந்த பணிக்காக கலவையை கொண்டு சென்ற ஒப்பந்ததாரர் ஊழியர்கள் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும் சேர்த்து சாலை அமைத்து சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது 
 
இரு சக்கர வாகனங்களின் சக்கரங்கள் கான்கிரீட்டால் பிடித்து கொண்டதால் அந்த பைக்குகளை வெளியே எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா என இரு சக்கர வாகனத்தையும் சேர்த்து சாலை அமைத்த ஒப்பந்ததாரரை நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்