தரைமட்டமான வீடுகள்.. சாலைகளில் கிடக்கும் சடலங்கள்! – ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்!

புதன், 22 ஜூன் 2022 (11:18 IST)
ஆப்கானிஸ்தானில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 130 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தாலிபான் ஆட்சி நடந்து வரும் ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள கோஸ்ட் சிட்டி என்ற பகுதியில் இன்று காலை பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பாகிஸ்தான் வரை உணரப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கோஸ்ட் சிட்டிக்கு கீழே 51 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் குடியிருப்புகள், கட்டிடங்கள் பல இடிந்து தரை மட்டமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 130 பேர் வரை இறந்திருக்கலாம் என்றும் 300க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்