பாஜகவில் இணைந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் – தமிழிசை டிவிட்டரில் அறிவிப்பு !

Webdunia
திங்கள், 1 ஜூலை 2019 (10:32 IST)
கிருஷ்ணகிரி மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் 100 பேர் தமிழிசை முன்பு பாஜக வில் நேற்று இணைந்தனர்.

தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் பலவீனமடைந்து வருகின்றன. தலைமை முதல் களப்பணியாளர்கள் வரை நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸை தோல்வியடையச் செய்வதற்காக கம்யூனிஸ்டுகள் பாஜகவை மறைமுகமாக ஆதரித்ததாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியைக் கிளப்பின.

அதைப்போல தமிழகத்திலும் ஒரு அதிசயக்கதக்க நிகழ்வு நடந்துள்ளது. தமிழகத்தின் கிருஷணகிரி மாவட்டத்தின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கமலாலயத்தில் தமிழிசை முன்பு பாஜகவில் இணைந்தனர். இதனை தமிழிசை சவுந்தர்ராஜன் தனது டிவிட்டரில் அறிவித்தார்.

வழக்கமாக கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து விலகுபவர்கள் மற்றொரு கம்யூனிஸ்ட் கட்சிக்குதான் செல்வது வழக்கம். ஆனால் அனைவரையும் ஆச்சர்யப்படவைக்கும் விதமாக பாஜகவில் இணைந்துள்ள சம்பவம் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்