மாநிலங்களவை தேர்தல்: ராம்விலாஸ் பஸ்வான் போட்டியின்றி தேர்வு

சனி, 29 ஜூன் 2019 (14:06 IST)
மாநிலங்களவை தேர்தலில் பாஜக களமிறக்கிய ராம்விலாஸ் பஸ்வான், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளில் லோக் ஜனசக்தியும் ஒன்று. இந்த கட்சி பீகார் மாநிலத்தில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சரும் ஆவார். சமீபத்தில் பீகார் மாநிலங்களவைக்கு தேர்வாகி இருந்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதால், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

எனவே அந்த பதவிக்கு நடந்த இடைத்தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பாரதிய ஜனதா கட்சி, ராம்விலாஸ் பஸ்வானை களமிறக்கியது.

இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலில் ராம்விலாஸ் போட்டியின்றி தேந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே ஒடிசாவில் இருந்து பிஜூ ஜனதாதளத்தை சேர்ந்த இருவர் போட்டியின்றித் தேர்வாகியுள்ளனர். மேலும் ராம்விலாஸ் பஸ்வான் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளூமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்