தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் கோவையில் இருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா பாதிப்புகள் இருந்து வந்த நிலையில் தற்போது மெல்ல குறைந்து வருகிறது. தற்போது மழை பருவம் தொடங்கியுள்ளதால் டெங்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கோவையில் இரண்டு பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதியாகி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவும், சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.