இந்நிலையில் நேற்று பிற்பகல் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தால் அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்தது. உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்துள்ளனர். அந்த கட்டிடத்தில் பணியாற்றிய இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மாயமான இரு பெண்களை தேடும் பணி தொடர்கிறது.