ஜூன் 14ம் தேதிக்கு பின் ஊரடங்கு நீடிப்பா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை!

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (21:56 IST)
தமிழகத்தில் ஜூன் 7ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் இந்த ஊரடங்கு ஜூன் 14ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் ஜூன் 14-ஆம் தேதி முடிவடைய உள்ள ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா? அல்லது ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பதா? என்பது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை செய்யவுள்ளார்.
 
தமிழ்நாட்டில் ஜூன் 14ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையை ஊரடங்கு நீட்டிப்பு அல்லது தளர்வு வழங்குவது குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை செய்த பின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
தமிழகத்தில் தற்போது உள்ள நிலையே மேலும் ஒரு வாரம் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்