தமிழகத்தில் முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட்! – ஏற்பாடுகள் தீவிரம்!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (10:49 IST)
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடக்க உள்ள நிலையில் போட்டி ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டு செஸ் ஒலிம்பியாட் ரஷ்யாவில் நடக்க இருந்த நிலையில் போர் காரணமாக மாற்றப்பட்டது, இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் நடத்துவதற்கான அனுமதி தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் முதன்முறையாக சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து பேசிய அமைச்சர் மெய்யநாதன் “சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 27 தொடங்கி ஆகஸ்ட் 10 வரை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்