பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை - தடகள பயிற்சியாளர் கைது

புதன், 30 மார்ச் 2022 (23:47 IST)
சென்னை நெசப்பாக்கம் பகுதியில் 13 வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் .   தினந்தோறும் அருகில் உள்ள மைதானத்தில் பள்ளி நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவது வழக்கம்.    அப்போது மணப்பாக்கம் பகுதியை சேர்ந்த கோபி கண்ணன் என்ற வாலிபர்,    நான் உங்களுக்கு இலவசமாக பயிற்சி சொல்லிக் கொடுக்கிறேன் என்று சிறுவர்களிடம் பேசியிருக்கிறார்.  இதை சிறுவர்கள் பெற்றோரிடம் சொல்லியிருக்கிறார்கள் .   இலவசமாக பயிற்சி கொடுக்கிறார் என்று பெற்றோரும் அதற்கு சம்மதம் சொல்லி இருக்கிறார்கள்.  
 
இதையடுத்து  கடந்த சில நாட்களாக இந்த சிறுவர்கள்  கோபிகண்ணனிடம்  பயிற்சி பெற்று வந்துள்ளனர்.   பயிற்சியின்போது சிறுவர்களிடம் கோபி கண்ணன் பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.   இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பெற்றோர்களிடம் இதுகுறித்து கூறியிருக்கிறார்கள்.   இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக எம்ஜிஆர் நகர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.   இந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோபி கண்ணனை கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்