மதுரவாயல் - வாலாஜா சாலையில் 50% மட்டுமே கட்டணம்

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (12:42 IST)
சென்னை மதுரவாயல் - வாலாஜா சாலையில் உள்ள இரு சுங்கச்சாவடிகளில் 50% மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது என தகவல். 

 
மதுரவாயல் - வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலை பராமரிக்கப்படாதது குறித்து ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. வழக்கை விசாரித்த ஐகோர்ட் சாலையை சீரமைக்கும் வரை 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க உத்தரவிட்டிருந்தது.
 
அதன்படி சென்னை மதுரவாயல் - வாலாஜா சாலையில் உள்ள இரு சுங்கச்சாவடிகளில் 50% மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.  உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 50% கட்டணம் வசூல் என்று நீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல் அளித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்