க்யூப், யு.எஃப்.ஓ. போன்ற டிஜிட்டல் நிறுவனங்களின் VPF கட்டணம் அதிகமாக இருப்பதாகக் கூறி தமிழ் திரையுலகில் அவ்வப்போது போராட்டம் நடந்ததும் பட வெளியீடு தாமதமானதும் தெரிந்ததே. ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா காரணமாக திரையரங்குகள் தொடர்ந்து திறக்கப்படாமல் இருந்ததால் ஓடிடி-யில் படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் தமிழக அரசு கடந்த ஊரடங்கு தளர்வுகளின் போது 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கியது. இதனைத்தொடர்ந்து தற்போது தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்களின் படங்களுக்கு VPF கட்டணத்தில் 50% சலுகை என்று க்யூப் அறிவித்துள்ளது. 3 மாதத்துக்கு கட்டணத்தில் சலுகை என நடப்பு தயாரிப்பாளர் சங்கத்துடன் க்யூப் ஒப்பந்தம் செய்துள்ளது.