இன்னும் 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு..!

Webdunia
ஞாயிறு, 2 ஜூலை 2023 (07:58 IST)
சென்னை உள்பட எட்டு மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வேலையிட்டுள்ள அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில்  லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்