#களம்_நமதே....முதலமைச்சர் கோப்பை-2023 இன்று தொடக்கம்- அமைச்சர் உதயநிதி

வெள்ளி, 30 ஜூன் 2023 (21:10 IST)
முதலமைச்சர் கோப்பை-2023, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கி வைத்தோம். 

‘தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை - களம் நமதே!’ எனும் பெயரில் மக்கள் தங்கள்  திறன்களை  வெளிப்படுத்தும்  வகையில் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சர் கோப்பை-2023 மா  நில விளையாட்டுப் போட்டிகள் இன்று சென்னை நேரு விளையாட்டு  அரங்கில் தொடங்கி வைக்கப்பட்டது.

இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

‘’#களம்_நமதே எனும் வெற்றி முழக்கத்தோடு முதலமைச்சர் கோப்பை-2023, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கி வைத்தோம். 

38 மாவட்ட வீரர் - வீராங்கனையரின் அணிவகுப்புடன் தொடங்கிய இந்த வண்ணமயமான நிகழ்வில், மாநில அளவிலானப் போட்டிக்கான ஜோதியை ஏற்றி வைத்து, முதலமைச்சர் கோப்பையை அறிமுகம் செய்தோம்.

மாநில அளவிலான போட்டிகளில் வென்று, தேசிய - சர்வதேச அளவில் ஆட்டநாயகர்களாக உருவெடுக்க நம் தமிழ்நாட்டு வீரர் - வீராங்கனையரை வாழ்த்தினோம்’’.  என்று தெரிவித்துள்ளார்.

#களம்_நமதே எனும் வெற்றி முழக்கத்தோடு முதலமைச்சர் கோப்பை-2023, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கி வைத்தோம்.

38 மாவட்ட வீரர் - வீராங்கனையரின் அணிவகுப்புடன் தொடங்கிய இந்த வண்ணமயமான நிகழ்வில், மாநில அளவிலானப் போட்டிக்கான ஜோதியை ஏற்றி… pic.twitter.com/a3OfVNAcbL

— Udhay (@Udhaystalin) June 30, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்