மெட்ரோ பணியால் சென்னையில் போக்குவரத்து மாற்றம்: முழு விபரங்கள்..!

Webdunia
ஞாயிறு, 2 ஜூலை 2023 (07:53 IST)
சென்னை  மேடவாக்கம் பகுதியில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் சாலை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதன்படி வேளச்சேரி பிரதான சாலை மற்றும் செம்மொழி சாலைகளில் மெட்ரோ பணி காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
மாம்பாக்கம், வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து நேரடியாக வாகனங்கள் தாம்பரம் நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
தாம்பரம் செல்லும் அனைத்து வாகனங்களும் மேடவாக்கம் மேம்பாலம் வழியாக செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்