சென்னையில் கடுமையான குளிர் நிலவி வரும் நிலையில் காலை பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.
குளிர்கால மாதமான டிசம்பர் முதலே சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகம் பனி பொழிந்து வருகிறது. கடந்த சில வாரங்களில் சென்னையில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை பொழியும் பனியால் சாலையெங்கும் புகை சூழ் மண்டலமாக காட்சியளிக்கிறது.
சாலைகளில் வாகனங்கள் ஓட்டிவோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இன்று அதிகாலையில் சென்னையில் அதிக அளவு பனி பொழிந்து வந்த நிலையில் மஸ்கட், ஆஸ்திரேலியா பகுதிகளில் இருந்து வந்த விமானங்கள் ஐதராபாத், திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.