பொங்கல் பரிசு ஜனவரி 9 - 12 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் ! தமிழக அரசு

வெள்ளி, 3 ஜனவரி 2020 (21:00 IST)
ஜனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரவுள்ளதை அடுத்து, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும்  தமிழக அரசின் சார்பில், ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 பரிசுத் தொகை வழங்க உத்தவிட்டுள்ளது.
இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதற்கு தமிழக அரசு சார்பில் ரூ.2363 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பரிசுத் தொகையை தேர்தலுக்கு முன் வழங்க நீதிமன்றம் தடைவிதித்திருந்ததை அடுத்து, உள்ளாட்சி தேர்தல் முடிந்து அதன் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் இன்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
அதில், வரும் 9 - 12 தேதிக்குள் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை  தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்