அதிமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி..

Arun Prasath

வெள்ளி, 3 ஜனவரி 2020 (18:55 IST)
ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்தவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை நெறுங்கி கொண்டிருக்கும் நிலையில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் அதிமுகவின் மக்கள் நலப்பணிகளுக்கு கிடைத்த பரிசாக இதனை கருதுவதாகவும் கூறியுள்ளனர்.

முன்னதாக மக்களவை தேர்தலில் படு தோல்வியை சந்தித்த அதிமுக கூட்டணி, உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு இணையான வாக்குகள் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்