அய்யா பாஸ் பண்ணி விட்ருங்கய்யா.. சாட் பாக்ஸில் கெஞ்சிய அரியர் மாணவர்கள்! – நீதிமன்றம் எடுத்த முடிவு!

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2020 (13:41 IST)
அரியர் மாணவர்கள் தேர்ச்சி தொடர்பான வழக்கு விசாரணையில் ஏராளமான மாணவர்கள் வீடியோ கான்பரன்சில் வந்த நிலையில் சாட் பாக்ஸில் கெஞ்சிய சம்பவம் வைரலாகியுள்ளது.

தமிழகத்தில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்க தடை விதித்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் வீடியோ கான்பரன்ஸ் நடைபெறும் பயனாளர் எண், கடவுசொல் இரண்டும் அரியர் மாணவர்களிடையே சமூக வலைதளங்கள் மூலம் பரவியுள்ளது. இதனால் நீதிபதிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தியபோது சுமார் 300க்கும் மேற்பட்ட அரியர் மாணவர்கள் வீடியோ கான்பரன்சில் புகுந்துள்ளனர்.

மேலும் மாணவர்கள் ம்யூட் செய்யாமல் இருந்ததால் டிவி சத்தம், குழந்தைகள், ட்ராபிக் சத்தம் என பெரும் இடையூறு எழுந்ததால் தேவையில்லாமல் கான்பரன்சில் இருக்கும் மாணவர்களை வெளியேறும்படி நீதிபதிகள் வலியுறுத்தியதுடன், விசாரணையையும் ஒத்தி வைத்தனர். இந்நிலையில் வீடியோ கான்பரன்சின் சாட் பாக்ஸில் தங்களை பாஸ் செய்து விடுமாறு மாணவர்கள் செய்தி அனுப்ப தொடங்கியதால் மேலும் பரபரப்பு எழுந்துள்ளது. இதனால் நீதிபதிகளே நீதிமன்ற பணியாளர்களை கொண்டு கான்பரன்சில் உள்ள மாணவர்களை வெளியேற்றும் பணியை மேற்கொண்டுள்ளனர். இதனால் வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்