அமலாபால் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட தடை! – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

வெள்ளி, 20 நவம்பர் 2020 (12:25 IST)
நடிகை அமலாபாலின் நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது தொடர்பான வழக்கில் புகைப்படங்களை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பிரபல தமிழ் நடிகையான அமலா பாலுக்கு கடந்த 2019ம் ஆண்டு தொழிலதிபர் பவ்னீந்தர் சிங் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் நிச்சயதார்த்ததில் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்களை பவ்னீந்தர் சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளார். இதற்கு எதிராக அமலாபால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் தன்னுடைய புகைப்படங்களை தன் அனுமதி இல்லாமல் சமூக வலைதளங்களில் பகிர்வதற்கு தடை விதிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் நடிகை அமலா பாலின் நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட தடை விதித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்