எந்த நோயும் இல்லாமல் கொரோனாவால் மட்டும் பலியான சென்னை இளம்பெண்: அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 9 ஜூலை 2020 (07:59 IST)
பொதுவாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்கள் ஏற்கனவே சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் உள்பட ஒருசில நோய்களினால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள் என்றும் அதனால் அவர்களுடைய உடல் உறுப்புகள் செயலிழந்து மரணம் அடைந்து வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் சென்னையை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் எந்தவிதமான நோயும் இல்லாமல் கொரோனாவால் மட்டும் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
சென்னையை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கு கடந்த ஆறாம் தேதி கொரனோ பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் ஜூலை ஆறாம் தேதி காலை 6 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரே நாளில் அதாவது மறுநாள் காலை ஏழு மணிக்கு உயிரிழந்தார். அவருக்கு சர்க்கரை நோய் இரத்த அழுத்தம் உட்பட எந்தவிதமான நோயும் இல்லை என்பதும் கொரோனா அறிகுறியான சளி மற்றும் காய்ச்சல் மட்டுமே இருந்ததாகவும் அவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போதே திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
 
இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் இணை நோய் இருந்ததால் உயிர் இழந்து இருந்த நிலையில் சென்னை இந்த இளம் பெண்ணுக்கு எந்த வித நோயும் இல்லாமல் கொரோனாவால் மட்டும் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை இளம்பெண்ணின் இந்த மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்