எல்லோரும் ஓட்டலில் சாப்பிடுங்கள், பில்லை அரசே செலுத்தும்: அதிரடி அறிவிப்பு

Webdunia
வியாழன், 9 ஜூலை 2020 (07:31 IST)
எல்லோரும் ஓட்டலில் சாப்பிடுங்கள், பில்லை அரசே செலுத்தும்
எல்லோரும் ஓட்டலில் சாப்பிடுங்கள்., ஓட்டல் பில்லை அரசே செலுத்தும் என அரசு அதிரடியாக அறிவித்துள்ளதால் பொது மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்
 
இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும் நிலையில் அந்நாட்டில் ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்து உள்ளது. மேலும் இங்கிலாந்தில் மிகவும் லாபகரமான நடந்து வந்த ஓட்டல் துறை மற்றும் சுற்றுலாத் துறை படுவீழ்ச்சி அடைந்த காரணத்தால் இந்த இரண்டு துறைகளை மீட்க அரசு ஒரு சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது 
 
அவற்றில் ஒன்றுதான் இங்கிலாந்தில் உள்ள மக்கள் அனைவரும் திங்கள் முதல் புதன் வரை மூன்று நாட்கள் ஓட்டலில் சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்றும் அவ்வாறு நீங்கள் சாப்பிடும் பில்லை 50% அரசு செலுத்திவிடும் என்று தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
பொதுமக்கள் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஓட்டலுக்கு வர தயங்குவதாகவும் இந்த அறிவிப்பு காரணமாக அனைவரும் ஓட்டலுக்கு வர வாய்ப்பிருப்பதாகவும் இதனால் ஓட்டல் துறை மீண்டு எழும் என்றும் இங்கிலாந்து அரசு இவ்விதமான அறிவிப்பை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
உணவகங்கள், பஃபே உள்ளிட்ட அனைத்து ஓட்டல்களுக்கும் இந்த சலுகை உண்டு என்பதால் ஓட்டல்களில் பொதுமக்கள் குவியத் தொடங்கியுள்ளனர். இந்த சலுகை வரும் ஆகஸ்ட் இறுதி வரை உண்டு என்று இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்