ஊரடங்கு முடியும் வரை நடமாடும் அங்காடிகள்!!

புதன், 8 ஜூலை 2020 (17:45 IST)
ஊரடங்கு முடியும் வரை நடமாடும் அங்காடிகள் செயல்படலாம் என அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறிவித்துள்ளார். 
 
ஊரடங்கு உத்தரவு நேரத்தில் பலர் காய்கறிகள் வாங்குவதாக கூறி இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வெளியே சுற்றி கொண்டிருப்பதால் இதனை கட்டுப்படுத்தும் வகையில் நடமாடும் காய்கறி அங்காடிகளை சென்னையின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் கொண்டு வர சென்னை மாநகராட்சி முடிவு செய்து நடமாடும்‌ அங்காடிகளை அறிமுகம் செய்தது. 
 
நடமாடும்‌ அங்காடிகளில்‌ செல்லும்‌ வணிகர்கள்‌, பொருட்களின்‌ விற்பனையின்‌ போது முகமூடிகள்‌, கையுறைகள்‌ போன்றவற்றை அணிந்து கொண்டிருப்பார்கள்‌. சென்னை மாநகராட்சி சார்பாக, அந்த வணிகர்களுக்கு சிறப்பு அடையாள அட்டைகள்‌ வழங்கப்பட்டு இருந்தது. 
 
இந்நிலையில் ஊரடங்கு முடியும் வரை நடமாடும் அங்காடிகள் செயல்படலாம். அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் கூடுவதை தவிர்க்க சென்னை மாநகராட்சியில் நடமாடும் மளிகை, காய்கறி அங்காடிகளுக்கான அனுமதி ஊரடங்கு முடியும் வரை நீட்டிப்பு என அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்