காலையில் ரூ.100, இரவில் வந்தால் ரூ.900! – முதலை பண்ணையில் கட்டண நிர்ணயம்!

Webdunia
ஞாயிறு, 30 அக்டோபர் 2022 (10:49 IST)
சென்னையில் உள்ள முதலை பண்ணையில் முதலைகளை காண்பதற்கான புதிய கட்டண விவரம் வெளியாகியுள்ளது.

சென்னை அருகே வடநெம்மெலியில் முதலை பண்ணை உள்ளது. இங்கு பல்வேறு வகையான முதலைகள் பரமாரிக்கப்பட்டு வருகின்றன. முதலை பண்ணைக்கு முதலைகளை காண வருபவர்களிடம் வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை வைத்து முதலை பண்ணை பராமரிக்கப்பட்டு வருகிறது.

ALSO READ: தேவர் ஜெயந்தி குருபூஜை! திமுக அமைச்சர்கள் மரியாதை!

வாரம்தோறும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முதலை பண்ணையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை முதலை பண்ணையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் காலை முதல் மாலை வரை பார்வையாளர்களுக்கு ரூ.100 கட்டணமாகவும், இரவு நேரத்தில் ரூ.900 கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரவில் வருபவர்கள் டார்ச் வெளிச்சத்தில் மட்டுமே முதலையை காண முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்