சுதந்திர போராட்ட வீரரும், அரசியல் தலைவருமான பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை இன்று பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் இருந்து பலரும் பசும்பொன் சென்றுள்ளனர்.
அவர் கலந்து கொள்ளாத நிலையில் திமுக அமைச்சர்களான துரைமுருகன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ், ஐ, பெரியசாமி உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தேவர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.