இன்று 15 மாவட்டங்களில் செம மழை! – வானிலை ஆய்வு மையம்!

ஞாயிறு, 30 அக்டோபர் 2022 (08:16 IST)
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சற்று காலதாமதாமாக நேற்று முதலாக வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று முதலாகவே தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. நவம்பர் 4ம் தேதி வரை பல பகுதிகளிலும் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

அதன்படி இன்று, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, குமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகலிலும், புதுச்சேரியின் சில பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

Edited By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்