15 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா சோதனை! – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (10:05 IST)
கூட்ட நெரிசலான பகுதிகளில் பணிபுரிவோருக்கு மாதம் இருமுறை கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒமிக்ரான் மற்றும் டெல்டா பாதிப்புகள் தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்திலும் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. சென்னையில் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கடற்கரைகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் கடைத்தெரு பகுதிகளில் பணியாற்றுபவர்களுக்கு கொரோனா பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் அவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை என மாதம் இரண்டு முறை கொரோனா சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்