இன்றும் நாளையும் தென்மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை

திங்கள், 3 ஜனவரி 2022 (08:40 IST)
இன்றும் நாளையும் தென் மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழகத்தின் கடற்கரை பகுதியை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதியிலும் தென் மேற்கு வங்க கடலில் வழி மண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
ஏற்கனவே கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் மீண்டும் இன்றும் நாளையும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது அம்மாவட்ட மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னை உள்பட வட மாவட்டங்களில் இன்று வறண்ட வானிலையே காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்