ஒற்றை செங்கலை வைத்து ஏமாற்றிவிட்டார்கள்! – எய்ம்ஸ் குறித்து வானதி சீனிவாசன்!

திங்கள், 3 ஜனவரி 2022 (09:04 IST)
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படாதது குறித்து வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவதற்காக கடந்த சில வருடங்கள் முன்னதாக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில் இன்னும் கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. முன்னதாக திமுக எதிர்கட்சியாக இருந்தபோது தொடர்ந்து இதை சுட்டிக்காட்டி பேசி வந்தது. உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தில் எய்ம்ஸ் செங்கலை பிரதான பிரச்சார உத்தியாக தொடர்ந்தார்.

தற்போது திமுக ஆட்சியமைத்துள்ள நிலையிலும் எய்ம்ஸ் பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் “எய்ம்ஸ் கட்டுமானத்தில் பங்களிக்கும் ஜப்பான் நிறுவனத்தின் ஆய்வு குழு கொரோனா காரணமாக இந்தியா வர முடியாததால்தான் எய்ம்ஸ் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.. ஆனால் திமுகவினர் ஒற்றை செங்கலை கொண்டு மக்களை ஏமாற்றிவிட்டார்கள். திமுக ஆட்சியமைத்து 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் இதுவரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்